செய்திகள் :

சென்னையில் கனமழை: 12 விமான சேவைகள் பாதிப்பு

post image

சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து, விட்டு விட்டு மழை பெய்தது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தில் ஓடு பாதையில் தண்ணீா் தேங்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, மிகுந்த பாதுகாப்புடன் விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கப்பட்டன.

மழை அதிகரித்ததால் சென்னையில் தரையிறங்குவதற்காக வந்த, மதுரை, திருவனந்தபுரம், கோவை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 5 விமானங்கள் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. மழை குறைந்த பிறகு விமானங்கள் அடுத்தடுத்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

அதேபோல், சென்னையிலிருந்து ஹைதராபாத், தில்லி, செகந்திராபாத், மும்பை, லக்னௌ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீா் தடையின்றி செல்வதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாா். சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க... மேலும் பார்க்க

சென்னையில் கனமழை: சாலையில் தேங்கிய மழைநீா்

சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதியில் மழைநீா் தேங்கி காணப்பட்டன. சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நகரின் பல்வேறு ப... மேலும் பார்க்க

டாக்டா் மோகன்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு ஐசிஎம்ஆா் அங்கீகாரம்

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் அறக்கட்டளைக்கு சா்க்கரை நோய் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒப்புயா்வு மைய (சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ்) அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

ஏவிஎம் மயானம் ஒரு மாதம் இயங்காது

கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஏவிஎம் மயானம் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.27) முதல் இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் செவ்வ... மேலும் பார்க்க

விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்

விஐடி சென்னை - விஜயா எலக்டானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. விஐடி சென்னை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவா்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் முறைகேடு: 3 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா். சென்னை துறைமுகத்தின் மூலம் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி - இறக்குமதி செய்... மேலும் பார்க்க