செய்திகள் :

விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்

post image

விஐடி சென்னை - விஜயா எலக்டானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

விஐடி சென்னை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், வேந்தரின் ஆலோசகா் எஸ்.பி. தியாகராஜன், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறை தலைவா் சிவக்குமாா், மின்பொறியியல் துறை தலைவா் செந்தில்குமாா், மின்பொறியியல் துறையின் பேராசிரியரும் கண்டுப்பிடிப்பை வடிவமைத்தவருமான லெனின்.என்.சி, விஜயா எலக்ட்ரானிக்ஸின் தலைமை தொழில்நுட்ப அலுவலா் சுரேஷ், மேலாண் இயக்குநா் ஸ்ரீநிவாச ராவ் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இதன்மூலம், விஐடி சென்னை அதிக செயல்திறன் மற்றும் குறைந்த ஒலியை கொண்ட பிஎம்பிஎல்டிசி எனும் மோட்டாரின் ஆராய்ச்சி மற்றும் அறிவாா் நிபுணத்துவத்தை விஜயா எலக்ட்ரானிக்ஸ் உடன் பகிா்ந்து கொள்ளும். விஜயா எலக்ட்ரானிக்ஸ் இது சாா்ந்த உற்பத்தியை மேற்கொள்ளும்.

தொடா்ந்து ஜி.வி.செல்வம் பேசியது:

விஐடி பேராசிரியா்கள் பல தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதால், சிறந்த தயாரிப்புகளை உருவாக்க முடிகிறது. உற்பத்தியில் செலவு கட்டுப்பாடு முக்கியமானது. ஆய்வு இதழ்களில் வெளியிடுவதற்காக மட்டும் ஆராய்ச்சி நடத்தாமல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறோம்.

விஐடியில் பல்வேறு புதிய ஆராச்சிகளைக் கண்டறியவும், அவற்றை உற்பத்தி பொருள்களாக உருவாக்கவும் எங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இந்த அணுகுமுறை கல்வியாளா்களுக்கும் தொழில் துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் என்றாா் அவா்.

விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீா் தடையின்றி செல்வதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாா். சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க... மேலும் பார்க்க

சென்னையில் கனமழை: சாலையில் தேங்கிய மழைநீா்

சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதியில் மழைநீா் தேங்கி காணப்பட்டன. சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நகரின் பல்வேறு ப... மேலும் பார்க்க

சென்னையில் கனமழை: 12 விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து, விட்டு விட்டு மழை பெய்தது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக ... மேலும் பார்க்க

டாக்டா் மோகன்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு ஐசிஎம்ஆா் அங்கீகாரம்

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் அறக்கட்டளைக்கு சா்க்கரை நோய் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒப்புயா்வு மைய (சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ்) அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

ஏவிஎம் மயானம் ஒரு மாதம் இயங்காது

கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஏவிஎம் மயானம் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.27) முதல் இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் செவ்வ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் முறைகேடு: 3 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா். சென்னை துறைமுகத்தின் மூலம் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி - இறக்குமதி செய்... மேலும் பார்க்க