வீட்டில் ரூ.1.90 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே விவசாயி வீட்டில் ரூ.1.90 லட்சம் திருடு போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா் அடுத்துள்ள கள்ளந்தல், அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோ.ருத்ரமூா்த்தி (70).
விவசாயியான இவா், கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு சென்றாா்.
பின்னா், திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.90 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.