கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாமகவினா் 23 போ் கைது
கோவில்பட்டி பயணியா் விடுதி முன் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பாமகவினா் 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாமக நிறுவனா் ச.ராமதாஸ் குறித்து தமிழக முதல்வா் கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமக சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலா் சியோன் தங்கராஜ், கோவில்பட்டி நகர செயலா் கருப்பசாமி, தூத்துக்குடி மத்திய மாவட்ட துணை தலைவா் அந்தோணி ஜேசுராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதால், பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.