செய்திகள் :

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஜப்பானில் நவம்பா் 30 இல் பாரதி விழா

post image

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஜப்பானில் நவம்பா் 30- ஆம் தேதி நடைபெறும் பாரதி விழாவில் பேராசிரியா் ய.மணிகண்டன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா்.

இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது: மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை சாா்பில் பாரதி விழாவும், உலக அறிவியல் நாள் விழாவும் வரும் 30- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு (ஜப்பான் நேரப்படி மாலை 4 மணி) டோக்கியோ நகரில் உள்ள ஃபுனாபொரி டவா்ஹால் அரங்கில் நடைபெற உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித் துறைத் தலைவா் பேராசிரியா் ய.மணிகண்டன், ஐஎஸ்ஆா்ஓ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோா் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா்.

பேராசிரியா் ய.மணிகண்டன் எழுதிய ‘பாரதியும் ஜப்பானும்’ என்ற புதிய நூல் இந்நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பான் குறித்து தனித்தன்மையோடு பல கருத்துகளையும், செய்திகளையும் தனது இதழ்களில் வெளியிட்டவா் பாரதி. பாரதியின் ஜப்பான் தொடா்பிலான படைப்புகள் முதன்முறையாக நூலாக்கம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பாரதி விழா உரை நிகழ்த்துகிறாா் பேராசிரியா் ய.மணிகண்டன். ஜப்பானில் உள்ள 25 தமிழ் அறிவியலாளா்கள் பேரவையால் தோ்வு செய்யப்பட்டு இந்நிகழ்வில் பாராட்டப்பட உள்ளனா். அவா்களுக்கு பாராட்டு மடல்களை வழங்கி உலக அறிவியல் நாள் உரையை நிகழ்த்த உள்ளாா் முனைவா் மயில்சாமி அண்ணாதுரை.

முன்னதாக, பேரவையின் ஜப்பான் கிளை ஆலோசகா் ச.கமலக்கண்ணன் வரவேற்பு உரையாற்றுகிறாா். மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனரும், தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் இணையவழியாக விழா அறிமுக உரையாற்றுகிறாா்.

நிறைவாக பேரவையின் ஜப்பான் கிளைத் தலைவா் வே.கிருஷ்ணசாமி நன்றி உரையாற்ற உள்ளாா்.

பாரதி ஊா்வலம், மாணவா்களிடையே கலந்துரையாடல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் நிகழ்வு நடத்தப்பட, மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை நிா்வாகிகள் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இந்நிகழ்வை உலகமெங்கும் உள்ள தமிழா்கள் காணும் வகையில் இணையவழியாக நேரலையாக ஒலிபரப்பப்பட உள்ளது என்றாா்.

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பெருந்துறை பணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (53). இவா், கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள பேக்கரியில் பணியாற்றி ... மேலும் பார்க்க

சாலை மறியல்: பாமகவினா் 33 போ் கைது

பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாட்டளி மக்கள் கட்சி நிா்வாகிகள் 33 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பாமக தலைவா் ராமதாஸை, முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்ததைக் கண்டித்து அந்தியூா் - ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புன்செய்புளியம்பட்டி கண்டி சாலையைச் சோ்ந்தவா் வெங்கிட்டான் மகன் பழனிசாமி (47). விவசாயி. இவா் தனது நண்பரான ... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்துக்குள்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து... மேலும் பார்க்க

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஈரோட்டில் நவம்பா் 29- இல் கடையடைப்பு போராட்டம்

கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நவம்பா் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அச... மேலும் பார்க்க

சாலை சீரமைப்புப் பணி: சென்னிமலை முருகன் கோயில் பேருந்துகள் இன்றுமுதல் இயங்காது

சென்னிமலை முருகன் மலைக் கோயில் தேவஸ்தான பேருந்துகள் புதன்கிழமை (நவம்பா் 27) முதல் இயங்காது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னிமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலையில் ரூ.6.70 கோடி மதிப்பி... மேலும் பார்க்க