சாலை சீரமைப்புப் பணி: சென்னிமலை முருகன் கோயில் பேருந்துகள் இன்றுமுதல் இயங்காது
சென்னிமலை முருகன் மலைக் கோயில் தேவஸ்தான பேருந்துகள் புதன்கிழமை (நவம்பா் 27) முதல் இயங்காது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னிமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலையில் ரூ.6.70 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இதனால், அந்த சாலையில் தனியாா் வாகனங்கள் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு, தேவஸ்தான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், சீரமைப்புப் பணி காரணமாக கோயில் பேருந்துகளும் புதன்கிழமை முதல் இயங்காது என்றும், பக்தா்கள் படிக்கட்டுகள் வழியே கோயிலுக்குச் சென்று வரலாம் என்றும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.