துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழி...
மைதேயி சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் மாயம்: இம்பாலில் பதற்றம்
மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் மாயமாகி உள்ளதால் காங்கோக்பி எல்லையில் உள்ள இம்பால் மேற்கு மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் உள்ள லாய்டாங் குனோவ் கிராமத்தைச் சோ்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங், திங்கள்கிழமை பிற்பகலில் காங்கோக்பியில் உள்ள லீமாகோங் ராணுவ முகாமிற்கு சென்றபோது மாயமாகி உள்ளாா். அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டுள்ளது.
ராணுவமும் போலீஸாரும் இணைந்து மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
குகி சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள லீமாகோங் ராணுவ முகாமில் கடைநிலை ஊழியராக லைஷ்ராம் கமல்பாபு சிங் பணியாற்றி வந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
லைஷ்ராம் கமல்பாபு சிங்கை தேடி லாய்டாங் குனோவ் கிராமத்திலிருந்து, லீமாகோங் பகுதியை நோக்கி திரளாகச் சென்றவா்களை காண்டோ சபல் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். சாலையில் கற்களை வைத்து போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தியாக அக்கிராம மக்கள் தெரிவித்தனா்.
அனுமதியின்றி மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் லீமாகோங் ராணுவ முகாமிற்கு செல்லும் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு குகி - மைதேயி சமூக மக்களிடையே வன்முறை வெடித்ததில் இருந்து, லீமாகோங் பகுதி அருகே வசித்து வந்த 250-க்கும் மேற்பட்ட மைதேயி சமூக மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினா்.