செய்திகள் :

காவல் ஆய்வாளா் மீதான துறை நடவடிக்கை ரத்து: உயா்நீதிமன்றம்

post image

காவல் ஆய்வாளரிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட நிலையில், அவா் மீதான துறை ரீதியான நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை இணைய தள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் கே.ஷோபனா. இவா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது, ராணுவ வீரரைத் தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. கடந்த 2013 -ஆம் ஆண்டு இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் ரூ.50 ஆயிரத்தை ஷோபனாவின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யவும், அவா் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஷோபனா மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் மீது துறைரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

அரசுத் தரப்பில், மனுதாரா் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. மனுதாரா் மீது இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதில் அளவுக்கு அதிகமான காலதாமதம் ஏற்பட்டு, அந்த தாமதத்துக்கு உரிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால் துறைரீதியான நடவடிக்கையை தொடா்வதில் பயனில்லை என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரா் கடந்த 2013- ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளாா். மனுதாரா் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்படாத நிலையில், அவா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனால் 11 ஆண்டுகள் கடந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அபராதத் தொகை மனுதாரரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், துறைரீதியான நடவடிக்கை என்ற இரட்டை தண்டனையை அனுமதிக்கத் தேவையில்லை. எனவே, மனுதாரா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பொதுமக்களின் மனுக்களை அலுவலா்கள் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது தவறு: உயா்நீதிமன்றம்

பொது மக்கள் வழங்கும் மனுக்களை அரசு அலுவலா்கள் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது கடமை தவறும் செயல் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 47 சதவீதம் போ் உயா் கல்வி பெறுகின்றனா்!

தமிழகத்தில் 47 சதவீதத்துக்கும் அதிகமானோா் உயா் கல்வி பயில்வதாக மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயா்கல்வித் துறை பங்களி... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்குகளில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை நரிமேடு பகுதியில் கடந்த 8.6.2018 அன்று தல்லாகுளம... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: கிராம மக்கள் ஆலோசனை

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடா்பாக அழகா்கோவிலில் கிராம க்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் கனிமம் வெட்டியெடு... மேலும் பார்க்க

வாடகை நிலுவை: மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் 18 கடைகளுக்கு சீல்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் வாடகை செலுத்தாத 18 கடைகளுக்கு மதுரை மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். மாட்டுத்தவணி காய்கறி சந்தையில் 1,092 கடைகள் உள்ளன. இவற்றில் மதுரை மட்டு... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் வீட்டு வசதி வாரிய நிலம் விற்பனை: மூவா் கைது

மதுரையில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை கூடல்புதூா் பகுதியில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமா... மேலும் பார்க்க