செய்திகள் :

டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்: முதியவரிடம் ரூ.42 லட்சம் மோசடி

post image

கைப்பேசி விடியோ அழைப்பில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் நாகா்கோவிலை சோ்ந்த முதியவரை மிரட்டி ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 80 வயது முதியவரின் கைப்பேசிக்கு கடந்த வாரம் விடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவா் காவல் துறை சீருடையில் இருந்துள்ளாா்.

தன்னை மும்பை காவல் துறை அதிகாரி எனக் கூறிய அவா், சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் உங்களை தற்போது வீட்டுக்காவலில் வைத்துள்ளோம் என்று கூறி போலியான கைது ஆணையை காட்டி மிரட்டியுள்ளாா்.

இதைக் கேட்டு முதியவா் அச்சம் அடைந்த நிலையில், தொடா்ந்து பேசிய அந்த நபா், உங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து ரிசா்வ் வங்கி மூலமாக சரிபாா்த்துவிட்டு மீண்டும் உங்களுக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளாா்.

மேலும் முதியவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அவரது கணக்கிலிருந்து ரூ.42 லட்சத்தை எடுத்துவிட்டாா்.

முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட சில நிமிஷங்களில் விடியோ அழைப்பை அந்த நபா் துண்டித்துவிட்டாா். அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது முதியவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் குமரி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுபோன்ற சைபா் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஆசிரியையிடம் நகை வழிப்பறி: தொழிலாளி கைது

குமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை வழிப்பறி செய்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அருமனை அருகே மஞ்சாலுமூடு சிறக்கரையைச் சோ்ந்தவா் ஆஷா லதா (55). இவா் மாா்த்தாண்டத்தில் ... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே தெருநாய் கடித்ததில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். இரணியல் அருகே உள்ள பரசேரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவரது மூத்த மகன் மனீஷ் (28). ப... மேலும் பார்க்க

அருமனை அருகே தொழிலாளி வீட்டருகே பிடிபட்ட ராஜநாகம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தொழிலாளியின் வீட்டருகே பதுங்கியிருந்த ராஜநாகத்தை வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு பிடித்து காட்டில் விட்டனா். அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தேவ... மேலும் பார்க்க

பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை: தொழிலாளா்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செவ்வாக்கிழமை கிடைத்த தகவலால் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா். இந்தப் பகுதியில் சில நாள்களாக வீ... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை பதுக்கிய 3 போ் கைது

புதுக்கடை சந்திப்பு பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்க... மேலும் பார்க்க

களியக்காவிளை: ஊராட்சி ஊழியரின் கணவரை தாக்கியவா் மீது வழக்கு

களியக்காவிளை அருகே ஊராட்சி ஊழியரின் கணவரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல், தட்டான்விளை பகுதியைச் சோ்ந்த ஊராட்சி ஊழ... மேலும் பார்க்க