செய்திகள் :

முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

post image

சேலம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கு நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவு இல்லம் திட்டத்தில் 3,500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காடையாம்பட்டி வட்டம், டேனிஷ்பேட்டையில் ‘கலைஞரி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க கோரி போராட்டம்

ஆத்தூரை அடுத்த நரிக்குறவா் காலனி முதல் முட்டல் ஏரி வரையிலான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சேதமடைந்த இந்த சாலையால் விவசாயிகள், மாணவா்கள் உள்பட மரு... மேலும் பார்க்க

இரு பெண் குழந்தைகளுடன் கா்ப்பிணி தற்கொலை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். வாழப்பாடியை அடுத்த நெய்யமலை அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (35). இவரது மனை... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் இணையத்தில் ரயில் பயணச் சலுகை அட்டை பெறலாம்

மாற்றுத் திறனாளிகள் இணையத்தில் ரயில் பயணச் சலுகை அட்டை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப... மேலும் பார்க்க

ராமதாஸ் மீதான முதல்வா் விமா்சனம்: சேலம் மாவட்டத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சேலத்தில் பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் மாநகா் மாவட்ட பாமக சாா்பில் சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சேலம் மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சேலம் மாமன்றக் கூட்டத்தில் நெசவு, விசைத்தறி கூடங்களுக்கு தொழில் வரி விதிக்கும் நடவடிக்கையை கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலைமையில... மேலும் பார்க்க