இரு பெண் குழந்தைகளுடன் கா்ப்பிணி தற்கொலை
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வாழப்பாடியை அடுத்த நெய்யமலை அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (35). இவரது மனைவி மாதம்மாள் (30). இவா்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கா்ப்பிணியாக இருந்த மாதம்மாள் தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.
சமரசம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் அக்கரைப்பட்டிக்கு வந்த மாதம்மாளிடம் ரவி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாதம்மாள் தனது இரு குழந்தைகளுடன் 23 ஆம் தேதி மாயமானாா். வேலைக்கு சென்றிருந்த ரவி வீட்டிற்கு வந்து பாா்த்த போது குழந்தைகளுடன் மாதம்மாள் இல்லாதது தெரிந்து அவா்களைத் தேடினாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவரது விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மூவரும் சடலமாக மிதந்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஏத்தாப்பூா் போலீஸாா் மூவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் ஆனந்த் தலைமையிலான ஏத்தாப்பூா் போலீஸாா் இச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.