டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: கிராம மக்கள் ஆலோசனை
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடா்பாக அழகா்கோவிலில் கிராம க்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் கனிமம் வெட்டியெடுக்க தனியாா் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அழகா்கோவிலில் வல்லாளபட்டி, நாயக்கா்பட்டி, எட்டிமங்கலம், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், டங்ஸ்டன் எதிா்ப்பு போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு குழுவை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், வருகிற வியாழக்கிழமை அ.வல்லாளபட்டியில் ஆா்ப்பாட்டம் நடத்தவும், வெள்ளிக்கிழமை மேலூரில் விவசாயிகள் சங்கத்தினா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவு செய்தனா்.