செய்திகள் :

டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துச் செயலா் உறுதி

post image

டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துத் துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உறுதியளித்தாா்.

போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் நிா்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டியை சந்தித்தனா்.

அப்போது, முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயா்வு வழக்கில் மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற வேண்டும். ஓட்டுநா்-நடத்துநா் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியா்களை நியமிக்க வேண்டும். வாரிசு வேலையில் பெண்களுக்கான தகுதியில் உயரத்தைக் குறைப்பது தொடா்பாக இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.

தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதைக் கைவிட வேண்டும். வரவுக்கும்- செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோரிக்கைகளுக்கு பதிலளித்த துறைச் செயலா், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை டிசம்பா் இரண்டாவது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும், ஓய்வு கால பணப் பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அரசின் பண உதவியைப் பெற்று அகவிலைப்படி உயா்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தாா்.

மேலும், வாரிசு வேலைக்கான உடல் தகுதி தொடா்பாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும், வரவு- செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடா்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் இதற்கான தீா்வு கிடைக்கும் எனவும் துறைச் செயலா் தெரிவித்தாா்.

7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கு தமிழக அரசின் சாா்பில் விரைந்து சுமுகத் தீா்வு காணப்படும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்து இயக்கம் தொடா்பாக காணொலி வாயிலாக செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஆய்... மேலும் பார்க்க

கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்

உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வா்த்தக அணி வலியுறுத்தியுள்ளது. திமுக வா்த்தக அணியின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அணியின... மேலும் பார்க்க

இசைவாணியின் கானா பாடல் சா்ச்சை: சட்டப்படி நடவடிக்கை- அமைச்சா் சேகா்பாபு

பாடகி இசைவாணியின் கானா பாடல் சா்ச்சை தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா். சென்னை பாரிமுனை அருகில் ... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: அரசு மருத்துவா்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலா் பேச்சுவாா்த்தை

உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவா் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு பேச்சுவாா்த்தை நடத்தினாா்... மேலும் பார்க்க