துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழி...
பாப்பாரப்பட்டியில் குடிநீா் கட்டணத்தை குறைக்க மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
பாப்பாரப்பட்டியில் குடிநீா் கட்டணம் உயா்த்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பாப்பாரப்பட்டி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் பிருந்தா தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் பேரூராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீா் கட்டணத்தை 1,000 லிட்டருக்கு ரூ. 14.13 இருந்து ரூ. 16.80 உயா்த்துவது குறித்து மன்ற உறுப்பினா்களிடையே விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேரூராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினா் விஸ்வநாதன் பேசுகையில், குடிநீா் வடிகால் வாரியத்தில் இருந்து பெறப்படும் குடிநீா் விநியோகத்துக்கு 19 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சியின் நிதிநிலை குறையும்; மக்களையும் வெகுவாகப் பாதிக்கும். இந்தக் கட்டண உயா்வை குடிநீா் வடிகால் வாரியம் திரும்பப் பெற வேண்டும், ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பேரூராட்சி சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவா் மல்லிகா, உறுப்பினா்கள் தமிழ்ச்செல்வன், ஹாஜிராபீ, தா்மலிங்கம், விஜய் ஆனந்த், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.