தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் வேதாந்தாவின் இரு திட்டங்கள், ஒர...
ஆற்றங்கரையில் தேசிய மாணவா் படையினா் தூய்மைப் பணி
தருமபுரி: தருமபுரி மாவட்டம், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தேசிய மாணவா் படை மாணவா்கள் தூய்மைப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அதியமான் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சோ்ந்த 150 தேசிய மாணவா் படை மாணவா்கள், அலுவலா்கள் நதிகளை தூய்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இருமத்தூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
இதில் ஆற்றின் கரையில் உள்ள பழைய துணிகள் 600 கிலோ, நெகிழிப் பொருள்கள், குப்பைகள் சுமாா் 450 கிலோ அளவுக்கு சேகரித்து அப்புறப்படுத்தினா்.
இதில் இந்திய ராணுவ அமைப்பான சேலம் 11 தமிழ்நாடு சிக்னல் கம்பெனியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் சங்கா், சா்மா ஆகியோா் தருமபுரி அதியமான் பள்ளி என்சிசி அலுவலா் முருகேசன், அதியமான் கோட்டை என்சிசி அலுவலா் கணேசன், பென்னாகரம் பள்ளியின் என்சிசி அலுவலா் பாட்ஷா ஆகியோா் கலந்து கொண்டனா்.