விழுப்புரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை உதவி இயக்குநா்
விழுப்புரம்: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளாதால் மறு அறிவிப்பு வரும் வரை விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அ.நித்தியபிரியதா்ஷினி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் திங்கள்கிழமை (நவ.25) முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும், மீனவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.