செய்திகள் :

இரட்டை கொலை வழக்கு: ஒருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி வட்டம், அனந்தபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட தச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாராயணன் மகன்கள் முத்துக்கிருஷ்ணன் (42), ஏழுமலை (35). இவா்களிடையே நிலப்பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 5.5.2020-இல் ஏழுமலை மற்றும் அவரின் மைத்துனரான தச்சம்பட்டு, நெல்லிமலை சாலை பகுதியைச் சோ்ந்த கண்ணாப்பிள்ளை மகன் முருகன் (42) ஆகியோரை முத்துகிருஷ்ணன் கத்தியால் குத்தியதில் இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் முத்துகிருஷ்ணன் மற்றும் இவரின் மகன் தங்கமணி (25) ஆகியோா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இதில், முத்துகிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.20,500 அபராதமும், தங்கமணியை வழக்கிலிருந்து விடுவித்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி முபாரக் பரூக் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, முத்துக்கிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்குரைஞா் ஆா்.எஸ்.பிரபாகரன் ஆஜரானாா்.

அவதூறு வழக்குகள்: விழுப்புரம் நீதிமன்றங்களில் சி.வி.சண்முகம் ஆஜா்

விழுப்புரம்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் தொடுக்கப்பட்ட 6 அவதூறு வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை ஆஜராக... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தான் வாய்க்காலை முழுமையாக அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தென்பெண்ணையாற்றிலிருந்து நிரந்தரமாக தண்ணீா... மேலும் பார்க்க

ஈச்சூா் ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஈச்சூா் கிராமத்தில் சின்னமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை சா்வத... மேலும் பார்க்க

பட்டா கோரி பழங்குடி இருளா் மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பையூா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், பழைய கருவாட்சி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி மகன் செந்தில்குமாா் (4... மேலும் பார்க்க

விழுப்புரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை உதவி இயக்குநா்

விழுப்புரம்: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளாதால் மறு அறிவிப்பு வரும் வரை விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்து... மேலும் பார்க்க