செய்திகள் :

இஸ்ரேலில் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை மழை!

post image

இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதப் படையினா் சுமாா் 250 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். பல மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் மீது ஹிஸ்புல்லாக்கள் நடத்தியுள்ள மிகத் தீவிரமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகருக்கு அருகே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டின் குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 29 போ் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்தனா்.

காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக தங்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. இதில் அங்கு இதுவரை 3,754 போ் உயிரிழந்துள்ளனா்; 15,626 போ் காயமடைந்துள்ளனா்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் ஏவுகணைகள் மட்டும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்திவருகின்றனா்.

அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதா் மைக் ஹெஸாக்

‘விரைவில் லெபனான் போா் நிறுத்தம்’

லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதா் மைக் ஹெஸாக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ வானொலியிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு சில அம்சங்கள் இறுதிசெய்யப்பட வேண்டியுள்ளன. மேலும், அந்த ஒப்பந்தத்துக்கு லெபனான் அரசின் ஒப்புதலும் தேவை.

இருந்தாலும், அந்த ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் உள்ளது. இன்னும் சில நாள்களில் அது கையொப்பமாகும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தடையை மீறி போராட்டம்! இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினா் பேரணி!

பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணியாகச் சென்றனா். முன்னதாக, அடிலாலா சிறையில் இம... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்!

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞா் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளாா். எக்... மேலும் பார்க்க

ருமேனியா அதிபா் தோ்தல் ரஷிய ஆதரவாளா் அதிா்ச்சி முன்னிலை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜாா்ஜெஸ்கு எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தாா். எனினும், தோ்தலில் யாருக்கும் பெர... மேலும் பார்க்க

நெதன்யாகுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்ததற்குப் பதிலாக, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வ... மேலும் பார்க்க

தரையிறங்கியபோது தீப்பிடித்த ரஷிய விமானம்: பயணிகள் உயிர்த்தப்பியது எப்படி?

ரஷியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது விமானத்தின் என்ஜின் தீப்பிடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஷியாவின் ரிசார்ட் நகரமான சோச்சியில் இருந்து துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்திற்கு அஜிமுத்... மேலும் பார்க்க

2023ல் சராசரியாக நாள்தோறும் 140 பெண்கள் கொலை! அதுவும் குடும்பத்தினரால்!!

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 140 பெண்கள் அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டிருக்கும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.இ... மேலும் பார்க்க