'சோசலிச', 'மதச்சார்பற்ற' சொற்கள் அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும்: உச்சநீதிமன்...
தரையிறங்கியபோது தீப்பிடித்த ரஷிய விமானம்: பயணிகள் உயிர்த்தப்பியது எப்படி?
ரஷியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது விமானத்தின் என்ஜின் தீப்பிடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷியாவின் ரிசார்ட் நகரமான சோச்சியில் இருந்து துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்திற்கு அஜிமுத் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் வந்தடைந்தது. சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்தனர்.
விமானம் நேற்று மாலை அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்தது. விமானத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் தரையிறங்கியதும் விமானி கொடுத்த அவசார அழைப்பையடுத்து, விமான நிலையத்தில் மீட்புக்குழு, தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. விமானத்திலிருந்த 95 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.