செய்திகள் :

UP: பண மாலையைப் பறித்துச் சென்ற டெம்போ டிரைவர்... சேஸ் செய்து மீட்ட மணமகன்! | Viral Video

post image
உத்தரப்பிரதேசத்தில் மணக் கோலத்தில் ஒருவர் பைபாஸில் பைக்கிலிருந்து, ஓடும் மினி டெம்போவுக்குத் தாவி சேஸிங்கில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி மீரட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில், கோட் சூட்டுடன் மணக் கோலத்திலிருந்த அந்த நபர், தனது திருமணத்தை முன்னிட்டு பாரம்பர்ய முறைப்படி குதிரையில் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மினி டெம்போவில் சென்ற அதன் டிரைவர், மாப்பிள்ளையின் பண மாலையைப் பறித்துச் சென்றார்.

உத்தரப்பிரதேசம்

அதனால், அதிர்ச்சியடைந்த மணமகன் உடனடியாக அங்கிருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி பைபாஸில் டெம்போவை துரத்திச் சென்றார். சேஸிங்கில் டெம்போவை நிறுத்துமாறு மணமகன் கூறியபோதும் டெம்போவின் டிரைவர் நிற்காமல் சென்றார். அதனால், மணமகன் பைக்கிலிருந்து டெம்போவுக்குத் தாவி, பண மாலையை மீட்டார். பின்னர், மணமகனின் உறவினர்கள் வந்து அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கினர்.

அப்போது, அந்தப் பணமாலையைப் பறிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், தவறுதலாக வந்துவிட்டதாகவும் டெம்போ டிரைவர் விளக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸுக்கு யாரும் புகாரளிக்காத நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

China: வாரத்திற்கு 3 நாள் ஆஸ்திரேலியா டு சீனாவுக்குப் பயணம்; காதலுக்காகக் கண்டம் தாண்டும் இளைஞர்!

சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வி பாடங்களில் கலந்து கொள்வதற்காகவும், காதலியைச் சந்திப்பதற்காகவும், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மூன்று மாத காலங்களாக வாரத்திற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

'கமிட் ஆனால் காசு!' - காதலை ஊக்குவித்து காசு கொடுக்கும் சீன நிறுவனம்!

சிங்கிளாக இருப்பவர்கள் கமிட்டானால் 66 யுவான் (நம்மூர் காசுக்கு ரூ.750) ரொக்க பரிசாக வழங்குகிறதாம் சீன நிறுவனம் ஒன்று. சீனாவை சேர்ந்தது இன்ஸ்டா 360 என்னும் கேமரா கம்பெனி. இவர்கள் கம்பெனிக்கென்று ஒரு டே... மேலும் பார்க்க

குடிபோதையில் பள்ளியில் ஆசிரியர்கள் தகராறு; கைது செய்ய போதையில் வந்த கான்ஸ்டபிள்... பீகாரில் கொடுமை!

பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனையாகிறது. பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் இரண்டு பேர் குடிபோதையில் வந்து மாணவர்களுக்... மேலும் பார்க்க

Marriage: ``ரயில்வே ஸ்டேஷன் முதல் ரோலர் கோஸ்ட் வரை'' - உலகை வியக்க வைத்த ஆச்சர்யத் திருமணங்கள்!

தனி மனித ஒழுக்கத்தை முன்னிறுத்தி மதங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது திருமணம். அதனால்தான் திருமணம் என்ற ஒரு கட்டமைப்பை 'திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்று புனிதப்படுத்தப்படுகிறது. ஆனால், த... மேலும் பார்க்க

Guinness World Records: உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ ஹோட்டல்... என்ன சிறப்பு?

உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ ஹோட்டல் பிலிப்பைன்ஸில் அமைந்துள்ளது. இதற்காக சமீபத்தில் கின்னஸ் உலக சாதனையும் அறிவிக்கப்பட்டது.நெக்ரோஸ் ஆக்சிடென்டலில் உள்ள Campuestohan Highland-ல் தான் இந்த ஹோட்டல் அமைந... மேலும் பார்க்க

"ஒருவர் டூத் பிரஷ்ஷை விழுங்குவதற்குக் காரணம்..." - மருத்துவர் பாசுமணி சொல்வதென்ன?

தலைமுடியை விழுங்கியவர்களைப்பற்றி கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷை விழுங்கியவர்களைப்பற்றி...? மகாராஷ்டிராவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் பல் துலக்கும்போது... மேலும் பார்க்க