Guinness World Records: உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ ஹோட்டல்... என்ன சிறப்பு?
உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ ஹோட்டல் பிலிப்பைன்ஸில் அமைந்துள்ளது. இதற்காக சமீபத்தில் கின்னஸ் உலக சாதனையும் அறிவிக்கப்பட்டது.
நெக்ரோஸ் ஆக்சிடென்டலில் உள்ள Campuestohan Highland-ல் தான் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இது 34.931மீ உயரமும்,12.121மீ அகலமும், 28.172மீ நீளமும் கொண்டது.
இந்த சேவல் வடிவ ஹோட்டலில் 15 அறைகள் உள்ளது. இவற்றில் ஏர் கண்டிஷனர் பொருத்தப்பட்ட அறைகள், பெரிய சிங்கிள் மற்றும் டபுள் படுக்கை அறைகள், தொலைக்காட்சி பொருத்தப்பட்ட மற்றும் பாத் டப் (bath tub) பொருத்தப்பட்ட குளியலறைகள் உள்ளன.
இந்த மாபெரும் சேவல் வடிவ ஹோட்டலின் கட்டுமான பணி 2023- ஜூன் -10, அன்று தொடங்கி 2024 - செப்டம்பர் 8 -ல் முடிவடைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 'ரிகார்டோ கானோ குவாபோ டான்' என்பவரால் கட்டப்பட்டது.
பொதுவாக அப்பகுதியில் புயல் மற்றும் சூறாவளி அதிகம் வீசும் என்பதால், இந்தக் கட்டிடம் அத்தகைய சூழ்நிலைகள் எதிர்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கின்னஸ் ரெக்கார்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சேவல் வடிவ ஹோட்டலை அமைக்க முடிவு செய்தது ஏன் என்பது குறித்து 'ரிக்கார்டோ கானோ குவாபோ டான்' கூறுகையில், "பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஆக்சிடெண்டல் பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் சேவல் சண்டை மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர். இந்த கட்டடம் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாகவும், வலிமையாகவும், ஆளுமை மிக்கதாகவும் எங்கள் மக்களை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பொதுமக்கள் பெரிதும் பார்த்து ஆச்சரியப்படும் இடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தின் உருவாக்கமே இந்த கட்டிடம்." எனக் கூறியுள்ளார்.
கோழி வடிவ ஹோட்டல் மட்டுமல்லாமல் Campuestohan highland ரெசார்டில் ஒரு பெரிய அலையடிக்கும் குளம் (Wave pool), மூன்று நீச்சல் குளம் ,பெரிய உணவகம், அழகான கஃபே, அமைதியான ஹோட்டல் மற்றும் பொனிடா bonita குடிசைகள் உள்ளன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...