உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷிய அதிபர் அனுமதி!
மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்!
மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை முன்னதாக வெளியானது.
மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. அதைத்தொடா்ந்து மலையாள திரையுலக நடிகைகள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இதையடுத்து, கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் திடீரென விலகினா்.
இதையும் படிக்க:அமெரிக்காவில் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி கைது!
நடிகை ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடா்பாக நடிகா் சித்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சித்திக் மீது கேரள காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். கேரள உயர்நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி கடந்த செப். 30-ல் மனுதாக்கல் செய்தார்.
நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சம்பவம் நடைபெற்று 8 ஆண்டுகள் ஆன நிலையில் புகார்தாரர் ஹேமா குழுவில் புகார் அளிக்காமல், 2018 ஆம் ஆண்டு முகநூலில் புகார் அளித்துள்ளார், சில நிபந்தனைகளுக்கு உள்படுத்தப்பட்டு, முன் ஜாமீன் அளிக்க விரும்புகிறோம். சித்திக்கின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்து நிபந்தனைகளுடன் சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.