செய்திகள் :

தக்கவைப்பு தொகையில் உடன்பாடின்றி வெளியேறினேனா? திட்டவட்டமாக மறுத்த ரிஷப் பந்த்!

post image

தில்லி கேபிடல்ஸ் அணியின் தக்கவைப்புத் தொகையில் உடன்பாடு இல்லாததால் ரிஷப் பந்த் அந்த அணியை விட்டு வெளியேறியதாக இந்திய அணின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறிய நிலையில், அதனை ரிஷப் பந்த் மறுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக அந்த அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக வீரர்களை தக்கவைத்த பட்டியலில் தில்லி கேபிடல்ஸ் அணியில் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பெயர் இடம்பெறவில்லை. அவர் தில்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க: ஆஸி. தொடர் நிறைவடைந்து இவர் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார்: ரவி சாஸ்திரி

ரிஷப் பந்த் மறுப்பு

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுனில் கவாஸ்கர், ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸ் அணியால் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம் எனவும், தில்லி கேபிடல்ஸ் அணிக்கும் ரிஷப் பந்த்துக்கும் தக்கவைப்பு தொகையில் உடன்பாடு எட்டப்படவில்லையா எனவும் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் இந்த கருத்தினை ரிஷப் பந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தில்லி கேபிடல்ஸ் அணியில் நான் தக்கவைக்கப்படாதது பணத்தின் காரணமாக அல்ல என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்; மீதமிருப்பது ரோஹித் சர்மா மட்டும்தான்!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதன் முதலாக அறிமுகமானது முதல் ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் 35.31 சரசாரியுடன் 3,284 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும்.

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ள நிலையில், ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தோல்வி..! இந்திய ரசிகர்கள் சோகம்!

ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று ஓராண்டு நிறைவையொட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப... மேலும் பார்க்க

மோசமான ஆட்டம்.. ஆஸி. தொடரில் இருந்து நட்சத்திர வீராங்கனை நீக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய மகள... மேலும் பார்க்க

அவர் சாம்பியன்; அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது: நாதன் லயன்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் புகழ்ந்து பேசியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நெருங்கும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வ... மேலும் பார்க்க

ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்..! வாட்சன் நம்பிக்கை!

ஆஸி.யின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஸ்டீஸ் ஸ்மித் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆஸி..க்கு சுழல்பந்து வீச்சாளராக அறிமுகமாகி மிகச்சிறந்த டெஸ்ட் பேட்டராக உருவாகியுள்ளார். வார... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: நியூசி. பேட்டிங்; ஆறுதல் வெற்றி பெறுமா?

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ... மேலும் பார்க்க

ஆஸி. தொடர் நிறைவடைந்து இவர் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார்: ரவி சாஸ்திரி

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நிறைவடைந்து இந்தியாவுக்கு திரும்புகையில் இவர் சிறந்த பேட்ஸ்மேனாக திரும்புவார் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் முன்னாள் தலைமைப... மேலும் பார்க்க