செய்திகள் :

சோமாலிலேண்ட் அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி!

post image

சோமாலிலேண்ட் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்று அதிபராகிறார்.

கிழக்கு ஆப்பிரிக்க தேசமான சோமாலியாவின் பிரிவினைப் பகுதியாகவுள்ள சோமாலிலேண்ட் குடியரசில் கடந்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று(நவ. 19) அறிவிக்கப்பட்டுள்ளன.

சோமாலிலேண்ட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற வேண்டிய தேர்தல், அந்நாட்டு அரசின் நிதிப் பற்றாக்குறை உள்பட பிற காரணங்களுக்காக தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது.

சோமாலிலேண்ட் தேசிய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ‘இர்ரோ’ என்று அழைக்கப்படும் வாடானி கட்சித் தலைவரான அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹிக்கு 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளன.

சோமாலிலேண்ட் அதிபர் முஸே பிஹி அப்டி(குல்மியே கட்சி) இந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். அவருக்கு சுமார் 35 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

சோமாலியாவின் ஓர் அங்கமாக இருந்த சோமாலிலேண்ட், 1991-ஆம் ஆண்டு தங்கள் பகுதியைச் சுதந்திரமடைந்த நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், சோமாலிலேண்ட்டுக்கு சர்வதேச அளவில் குடியரசு நாடாக இன்றளவும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அங்குள்ள சுமார் 6 மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

சோமாலிலேண்ட்டுக்கான சர்வதேச அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதை முன்னிறுத்தியே இரு தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், சோமாலிலேண்ட்டுக்கான சர்வதேச அங்கீகாரம் அளிக்க அமெரிக்க தரப்பிலிருந்து நேர்மறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இர்ரோ இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உறுதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு உக்ரைன் தாக்குதல்: ரஷியா

அமெரிக்க வழங்கிய நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு, ரஷியாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நிலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.தாங்கள் வ... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதின் அடுத்தாண்டில் இந்தியா வருகை!

ரஷிய அதிபர் புதின் அடுத்தாண்டு மே மாதத்தில் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஷிய அதிபர் விளாதீமிர் புதின் அடுத்தாண்டு மே மாதத்தில், வருடந்தோறும் நடைபெறும் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர சு... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷிய அதிபர் அனுமதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷியப் படைகளுக்கு அதிபர் விளாதிமீர் புதின் அனுமதி அளித்துள்ளார்.நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்க... மேலும் பார்க்க

ஜி20 குழுப் புகைப்படத்தில் இடம்பெறத் தவறிய ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ

பிரேஸிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், வழக்கமான உலகத் தலைவர்கள் எடுத்துக்கொள்ளும் குழுப் புகைப்படத்துக்காக ஜோ பைடன் வந்தபோதுதான், அவருக்குத் தெரிந்தது, ஏற்கனவே அவர் இல்லாமலே புகைப்படம... மேலும் பார்க்க

பாலஸ்தீன இளைஞரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படை!

பாலஸ்தினத்தின் மேற்கு கரையோரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்கு கரையின் நபுலஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்து சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, துப்பா... மேலும் பார்க்க

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பெய்ரூட்டில் 10 பேர் பலி! 25 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (நவ. 19) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார்க்க