செய்திகள் :

பாலஸ்தீன இளைஞரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படை!

post image

பாலஸ்தினத்தின் மேற்கு கரையோரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேற்கு கரையின் நபுலஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்து சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

''நபுலஸ் பகுதி அருகேவுள்ள அல் மசாகென் அல் ஷ பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 18 வயதுடைய நெளர் அர்ஃபாட் பலியானார். அவரின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தது. இவர் உயர்நிலைப் பள்ளி மாணவர்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பாலஸ்தீன கல்வித் துறை மாணவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த கொடூர செயல் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டது.

நபுலஸின் கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டபோது மனித வெடிகுண்டுகள் என நினைத்து மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இந்த மோதலில் நெளர் அர்ஃபாட் பலியானார்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லைகளைக் குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | வால்மார்ட் ஓவனில் இந்தியப் பெண் சடலம்: கொலை இல்லை என்கிறது கனடா காவல்துறை!

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷிய அதிபர் அனுமதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷியப் படைகளுக்கு அதிபர் விளாதிமீர் புதின் அனுமதி அளித்துள்ளார்.நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்க... மேலும் பார்க்க

ஜி20 குழுப் புகைப்படத்தில் இடம்பெறத் தவறிய ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ

பிரேஸிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், வழக்கமான உலகத் தலைவர்கள் எடுத்துக்கொள்ளும் குழுப் புகைப்படத்துக்காக ஜோ பைடன் வந்தபோதுதான், அவருக்குத் தெரிந்தது, ஏற்கனவே அவர் இல்லாமலே புகைப்படம... மேலும் பார்க்க

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பெய்ரூட்டில் 10 பேர் பலி! 25 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (நவ. 19) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார்க்க

வால்மார்ட் ஓவனில் இந்தியப் பெண் சடலம்: கொலை இல்லை என்கிறது கனடா காவல்துறை!

இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பெண், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரி அடுப்பில் சடலமாகக் கிடந்த வழக்கில், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கனடா ... மேலும் பார்க்க

தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்த திட்டம்: டிரம்ப்

எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதை டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் சட்டவி... மேலும் பார்க்க

இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

கொழும்பு: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில், 21 உறுப்பினா்கள் அடங்கிய சிறிய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்றது.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், வீண் செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்... மேலும் பார்க்க