விமானம் வேதகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது: உ.பி. கவர்னர் பேச்சு!
Nayanthara Documentary : `லேடி சூப்பர்ஸ்டார்னு கூப்பிடாதப்பா!'னு நயன்தாரா சொன்னாங்க! - அட்லீ
நயன்தாராவின் சினிமா கரியர் மற்றும் திருமண வாழ்க்கையை பேசும் ஆவணப்படமாக உருவாகி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது, `நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்'.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆவணப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் இயக்குநர் அட்லீ, விஷ்ணு வரதன், நெல்சன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் , நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்ட பலரின் பேட்டிகளும் அடங்கியிருக்கிறது.
அந்தப் பேட்டியில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, ``நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் செட்டுக்குள் நடந்து வந்ததும்....அவர் எப்போதும் அழகாக இருப்பார். அந்த நடையில் ஒரு ராயல்டி தெரிந்தது. அவருடைய பேச்சு, நேர்மையான சிரிப்பு போன்ற விஷயங்களால் சுலபமாக கனெக்ட்டாகிவிட்டேன். நாம் சுலபமாக நண்பர்களாக நினைக்கும் நபரைப் போன்றவர் அவர். 2006-ல் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான `பாஸ்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.
அந்த படப்பிடிப்பின் சமயத்தில் அவர் சில கடினமான காலத்தில் இருந்ததாக தெரிவித்த நாகர்ஜுனா, ``சுவிட்சர்லாந்தில் ஒரு பாடலை ஷூட் செய்துகொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் ரிலேஷன்ஷிப் பிரச்னைகளால் நெருக்கடியான காலத்தில் இருந்தார் நயன்தாரா. அவருடைய போன் ஒலித்தால் எங்களுக்கு பயம் வந்துவிடும். அந்த ஒலியைக் கேட்டதும் அவர் சோகமாகிவிடுவார்." எனக் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இந்த ஆவணப்படத்தில் பேசிய இயக்குநர் அட்லீ, `` லேடி சூப்பர்ஸ்டார். அப்படி கூப்பிட்டாலே அவர் `அப்படி கூப்பிடாதப்பா!' என்பார். ஹைதராபாத்திலிருக்கும் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்குச் சென்று நான் அவரிடம் `ராஜா ராணி' படத்தின் கதையை சொன்னேன். அதன் பிறகு முழுமையாக கதையை சொல்ல தொடங்கினேன். அவர் `முதல் பாதியை கேட்கும்போது அதில் ஹீரோ எனக்கு தெரியவே இல்லை.
ஹீரோயினுக்குத்தான் அதிக வேலைகள் இருக்கிறது' என்றார். இரண்டாம் பாதி கேட்டு முடித்ததும் இந்த கதை ஃப்ரஸாக இருப்பதாக கூறினார். கதையை முடிவு செய்வதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டார். பிறகு இரண்டு நாள்களில் கதைக்கு ஓகே சொன்னார். அப்படிதான் `ராஜா ராணி' தொடங்கியது. அவர் படத்திற்குள் வந்ததும் படத்தின் ஸ்கேலும் பெரிதாகியது. அவர் படத்திற்குள் வந்தது ஒரு ஆசீர்வாதமாக உணர்கிறேன். அதனால்தான் அவரை டார்லிங் என அழைக்கிறேன்.'' எனக் கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...