எல்ஐசி தளம் ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மீண்டும் மாற்றம்!
எல்ஐசி தளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதால் மக்கள் எல்ஐசி தளத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மொழி மாற்றம் குறித்து எல்ஐசி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘எங்களுடைய கார்ப்பரேட் வலைதளத்தில் licindia.in மொழி மாற்றம் செய்யும் பக்கங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் செயல்படவில்லை. இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது.
இப்போது எல்ஐசி வலைதளம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. சிரமத்திற்கு நாங்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.