செய்திகள் :

``விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல..." - வைரலாகும் உத்தரப்பிரதேச ஆளுநரின் பேச்சு!

post image

உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டவர் ஆனந்த்பென் படேல். இவர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காஜா மொய்தீன் சிஷ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``புத்தரின் பூமியான இந்தியா எப்போதும் மோதலை விட அமைதியின் பாதையை தேர்ந்தெடுத்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்தியாவின் கொள்கைகள் உலக அரங்கில் தேசத்தின் அந்தஸ்தை உயர்த்தியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத் - ஆனந்திபென் படேல்

உத்தரப்பிரதேச பல்கலைக்கழகங்கள் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசையில் சிறப்பாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த இணையற்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள பண்டைய இந்திய நூல்களைப் படிக்க வேண்டும். இந்தியாவின் முனிவர்கள் மற்றும் அறிஞர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கி, இன்றும் உலகிற்கு நன்மை செய்கிறார்கள். அதற்கு உதாரணமாக வேதகால முனிவர் பரத்வாஜை காணலாம். முதன்முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல. அதைக் கண்டுபிடித்தவர் முனிவர் பரத்வாஜ்தான். ஆனால் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட்டுவிட்டது.

வேத காலத்தைச் சேர்ந்த முக்கியமான ரிஷியான இவர் இந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் குறிப்பிடப்படுகிறார். ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் தூங்கிக்கொண்டிருந்ததாக படித்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் ரகசியமாக ஆராய்ச்சி செய்து, ஆயுதங்களை கண்டுபிடிப்பார். அதனால்தான், ஆறு மாதங்களுக்கு கும்பகர்ணன் மக்களின் கண்களில் படக் கூடாது என ராவணன் உத்தரவிட்டிருந்தார். எனவே, பழங்கால இந்தியாவின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். இந்த அறிவு இந்திய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனந்திபென் படேல்

அவற்றைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்." எனப் பேசினார்.

விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் இணைந்து டிசம்பர் 17, 1903 அன்று அமெரிக்காவின் வட கரோலினாவில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள். ஆனால், சில பா.ஜ.க தலைவர்கள் ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள 'புஷ்பக விமானம்' தான் முதல் விமானம் எனக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை ‘உசுப்பிவிட்ட’ பைடன்... 3-வது உலகப் போருக்கு அச்சாரமா?!

ஜோ பைடன் கிளப்பிவிட்ட அதிர்ச்சிஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவிக் காலம் முடியும் தருவாயில் மிக முக்கிய நகர்வாக, நீண்ட தூர சென்று தாக்கவல்ல சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான உக்ரைன் மீதான க... மேலும் பார்க்க

MANIPUR: மணிப்பூரில் மீண்டும் வன்முறைத் `தீ'... உலக அரங்கில் சரிகிறதா `மோடி' பிம்பம்?!

கடந்த ஆண்டு, மே மாதம் தொடங்கிய மணிப்பூர் கலவரம், ஓன்றரை வருடமாக ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. சமீப மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கலவரம், தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கும்... மேலும் பார்க்க

'தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பேன்..!' - சரண்டரான தளவாய்... எடப்பாடி மனம்மாறிய பின்னணி

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார... மேலும் பார்க்க

LIC: "தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும்"- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

LIC-யின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்திக்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. LIC-யின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர... மேலும் பார்க்க

Russia - Ukraine: அதிபர் புதின் கொடுத்த ஒப்புதல்; உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதம்?!

ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. யுனிசெஃப் அமைப்பின் தகவலின் படி இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 659 குழந்... மேலும் பார்க்க

"LIC இணையதளம் இந்தி திணிப்பிற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது"- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் LIC-யின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது.``இது பிற மொழி பேசும் மக்கள் மீதான இந்தித் திணிப்பு. ... மேலும் பார்க்க