செய்திகள் :

Kanguva: ``தெலுங்கில் பாகுபலி, தமிழில் கங்குவா" - தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் சுசீந்திரன்

post image
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழனன்று (நவம்பர் 14) கங்குவா திரைப்படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டதன்படி திரையரங்குகளில் படத்தின் ஒலி குறைக்கப்பட்டது.

கங்குவா

அந்த சமயத்தில் நடிகர் சூரி, ``கங்குவா, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட படம். படத்தைப் பார்த்த பலர் நல்லா இருப்பதாகக் கூறி ஆதரவு தருகின்றனர். ஆனால், சிலர் படத்தைப் பார்த்தும், பார்க்காமலே நெகட்டிவான விமர்சனங்களைத் தருகின்றனர். வாரம் வாரம் நாம் கவனிக்கப்பட வேண்டும், வைரலாக வேண்டும் என கேமரா முன் வந்து நெகட்டிவாகப் பேசுகிறார்கள்." என்று கூறி படம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரனும் கங்குவா படத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் ஒன்று வெளியிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ``நேற்று மாலை என் குழந்தைகளுடன் கங்குவா திரைப்படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரமாண்டமான திரைப்படம் இது. ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சிவா. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

சுசீந்திரன் கடிதம்

சூர்யா sir-ன் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. Camara, CG என அனைத்துத் துறைகளிலும் உலகத் தரத்துக்குத் தமிழில் இந்த கங்குவா. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள். அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான்." என்று சுசீந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குநர் சுசீந்திரன்

மேலும், ``தெலுங்கில் எப்படி பாகுபலி பிரமாண்ட திரைப்படமோ, அதுபோல தமிழ் சினிமாவில் கங்குவா பிரமாண்டமான திரைப்படம். மிக முக்கியமான சினிமா. எதற்காக இந்தத் திரைப்படத்தைப் பற்றித் தவறான கருத்துகளை பதிவுசெய்கிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து குடும்பத்தோடு சென்று பாருங்கள். சூர்யா சாரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் வேலை செய்த அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் பிரமிப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் சிவா சாருக்கு வாழ்த்துகள்" என்று சுசீந்திரன் வீடியோ ஒன்றில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Nayanthara Documentary : `லேடி சூப்பர்ஸ்டார்னு கூப்பிடாதப்பா!'னு நயன்தாரா சொன்னாங்க! - அட்லீ

நயன்தாராவின் சினிமா கரியர் மற்றும் திருமண வாழ்க்கையை பேசும் ஆவணப்படமாக உருவாகி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது, `நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்'.நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்ட... மேலும் பார்க்க

Nayanthara Beyond The Fairy Tale Review: `டயானா டு நயன்தாரா' - முழுமையை உணர வைக்கிறதா ஆவணப்படம்?

நயன்தாரவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது `நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற ஆவணப்படம்.அமித் கிருஷ்ணன் இதை இயக்கியிருக்கிறார். நயன்தாரா - விக்னேஷ் சிவன... மேலும் பார்க்க

`ஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும்' - திருப்பூர் சுப்ரமணியனுக்கு வசந்த பாலன் ஆதரவு

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட டிஜிட்டல் யுகத்தில், படம் ரிலீஸ் அன்றே அப்படம் குறித்த விமர்சனங்கள் வெளிவருகின்றன. அதிலும், பல முன்னணி ஊடகங்கள் உட்பட பல யூடியூப் சேனல்கள், தியேட்டரில் முதல் காட... மேலும் பார்க்க

Arun Vijay: ``அஜித்துக்கும் எனக்கும் போட்டியா?'' - நடிகர் அருண் விஜய் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாகவுள்ள திரைப்படம் 'வணங்கான்'.இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க

``என்னை நாயுடன் ஒப்பிட்டு பயங்கரமா ட்ரோல் செஞ்சாங்க!'' -நயன்தாரா உடனான காதல் குறித்து விக்னேஷ் சிவன்

நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் திருமணம் பற்றிய 'Nayanthara: Beyond the Fairytale' என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது.அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த... மேலும் பார்க்க

Inbox 2.0 Eps 11: உங்கள் கோரிக்கை நிறைவேறியது! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 11 இப்போது வெளிவந்துள்ளது.வீடியோவை முழுமையாகக் காண லிங்கை கிளிக் செய்யவும். நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட ... மேலும் பார்க்க