கோத்ரா ரயில் எரிப்பு படத்துக்கு பெருகும் ஆதரவு..! உ.பி. முதல்வரை சந்தித்த நடிகர்...
Whatsapp : வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பகிர்ந்த மெட்டா; ரூ.213 கோடி அபராதம் விதித்த CCI ஆணையம்!
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களை இயக்கி வருகிறது. இதில் பாமர மக்கள் வரை சென்ற தளம்தான் வாட்ஸ்அப். இலவச வீடியோ, ஆடியோ கால், இளைஞர்களை கவரும் வகையில் ஸ்டிக்கர், எமோஜி, ஸ்டேடஸ் என இந்தத் தளம் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக அட்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021-ம் ஆண்டு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை (Privacy policy) புதுப்பிப்பின் மூலம், வாட்ஸ்அப் சேவை தவிர, வேறு நோக்கங்களுக்காக வாட்ஸ்அப்பில் சேகரிக்கப்பட்ட பயனர் தரவுகளைப் பாதுகாத்து வந்தது.
இதற்கிடையில், வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் மற்ற செயலிகளுக்கு பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்தப் புகாரில், இந்திய போட்டி ஆணையம் (The Competition Commission of India (CCI)) இது தொடர்பாக விசாரித்து வந்தது. இந்த நிலையில்தான் மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213.4 கோடி அபராதம் விதித்திருக்கிறது.
இது தொடர்பாக CCI ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ``வாட்ஸ்அப் மூலம் செயல்படும் மெட்டா குழுமம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டது. மேலும், இந்தியாவில் ஆன்லைன் காட்சி விளம்பரங்களில், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மெட்டா ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் கொள்கை புதுப்பிப்பின் போது, வாட்ஸ்அப் அனைத்து பயனர்களுக்கும் மெட்டாவுடன் தங்கள் தரவு பகிர்வை கட்டாயமாக்கியது.
இதன் விளைவாக, பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டியிருந்தது. அடிப்படையில் வாட்ஸ்அப்பின் 2021 கொள்கை புதுப்பிப்பு, போட்டிச் சட்டத்தின் கீழ் நியாயமற்றது எனக் கண்காணிப்புக் குழு முடிவு செய்தது. வாட்ஸ்அப் சேவையை வழங்குவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக மெட்டா நிறுவனங்களுக்கிடையில் வாட்ஸ்அப் பயனர்களின் தரவைப் பகிர்வது தவறு. அதனால், மெட்டா இந்த செயலை தொடர்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு அபராதமாக ரூ.213.14 கோடி விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
வலிப்பு வந்தவரை ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வைக்க வேண்டும். மல்லாந்த நிலையிலோ, குப்புறப்படுத்த நிலையிலோ படுக்கவிடக் கூடாது. ஒருக்களித்து படுக்க வைக்கும் நிலை முக்கியமானது. இதற்கு 'ரெக்கவரி பொசிஷன்' (Recovery position) என்றே பெயர். மல்லாந்து படுத்திருக்கும்போது வலிப்பின்போது வரும் எச்சில், நுரை போன்றவை சுவாசப் பைக்குள் போய்விட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம். அதனால் தலையை ஒருக்களித்துத் திருப்பிவிட்டு, ஒரு காலையும் மடக்கிய நிலையில் பக்கவாட்டில் எடுத்துப் போட்டு படுக்க வைக்க வேண்டும்.
தலைக்கு அடியில் கை வைத்துத் தூங்குவது போல, நோயாளியின் கையையும் தலைக்கு ஆதரவாக மடக்கி வைக்க வேண்டும். இதுபோன்ற ஒருக்களித்த நிலையால் இதயத்துக்கும் அழுத்தம் ஏற்படாது. வாயிலிருக்கும் எச்சிலும் உடலுக்குள் செல்லாமல் வெளியேறிவிடும்.
நாக்கைக் கடித்துக் கொள்வார்கள் என்பதால் வாய்க்குள் துணியைத் திணிப்பார்கள். விரலை வாய்க்குள் வைப்பார்கள். ஸ்பூன் போன்றவற்றையும் திணிப்பார்கள். இதெல்லாம் தவறு. நாக்கைக் கடித்துக் கொண்டாலும் கவலை வேண்டாம். காயம் ஆறிவிடும்.
கையில் எந்த இரும்பு பொருளையும் கொடுக்கக் கூடாது. சாவிக்கொத்து கொடுக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. சாவியைக் கொண்டு முகத்தில் இடித்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. எனவே, இரும்புப் பொருள்கள், கூர்மையான பொருள்களைக் கையில் கொடுக்கக் கூடாது.