மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
`யார், யாரிடம் இடங்களை அபகரித்தார்?' - என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரௌடி சீசிங்ராஜா வீடுகளில் ரெய்டு
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சீசிங் ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். நில விவகாரம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த சீசிங்ராஜா மீது 6 கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 39 வழக்குகள் பதிவாகின. பிரபல ரௌடியாக வலம் வந்த சீசிங்ராஜாவை போலீஸார் ஏழு தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்ட ரௌடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நிலவிவகாரத்தில் தொடர்புடைய சீசிங்ராஜா யார், யாரிடம் இடங்களை அபகரித்தார் என்று விசாரணை நடத்த தாம்பரம் போலீஸார் முடிவு செய்தனர். அது தொடர்பாக வருவாய் துறையினரிடமும் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் உதவி கமிஷனர்கள், 14 இனஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் இன்று (19.11.2024) அதிரடியாக வருவாய்துறையினருடன் சேர்ந்து சீசிங் ராஜா மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் அடுத்த ராமகிருஷ்ணாபுத்தில் உள்ள சீசிங் ராஜா வீட்டில் உதவி கமிஷனர் வைஷ்ணவி தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர். இதைப்போல சேலையூர், மப்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் சிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...