ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை ‘உசுப்பிவிட்ட’ பைடன்... 3-வது உலகப் போருக்கு அச்சாரம...
`ஒரு கொலை இல்லை... இரண்டு கொலை’ - கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்
கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளங்கோவன் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர், அமிர்தராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமிர்தராஜ் தன் மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி, அமிர்தராஜ் இடையே அடிக்கடி பிரச்னையாகியுள்ளது.
கோபமடைந்த அமிர்தராஜ் விஜயலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு சதி திட்டம் தீட்டினர்.
இளங்கோவனுக்கு தெரிந்த லாரி ஓட்டுநர் ஒருவரிடம் பேசியுள்ளனர். விஜயலட்சுமி மீது லாரியை மீது ஏற்றி கொலை செய்துவிட்டு, அதை விபத்து போல அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். மனைவி இறந்தப் பிறகு அமிர்தராஜ் காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டு,
விஜயலட்சுமி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளார். பிறகு அமிர்தராஜ் கலைவாணியுடன் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அமிர்தராஜின் வீட்டில் இளங்கோவன் வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை காலி செய்யுமாறு இளங்கோவனிடம் அமிர்தராஜ் கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன், “விஜயலட்சுமி கொலை வழக்கை காவல்துறையிடம் சொல்லி விடுவேன்.” என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து காதலி கலைவாணியுடன் இணைந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொலை செய்துள்ளார். இந்த சமபவம் தொடர்பாக, அமிர்தராஜ், கலைவாணி உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...