செய்திகள் :

சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

post image

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வரும், அத்துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இதனை எதிர்த்து, எடப்பாடி கே. பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கத்துக்கு முன்னதாக உத்தரவிட்டது.

இதையும் படிக்க: ராணி லட்சுமிபாயின் துணிச்சல், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர்

இந்நிலையில், இவ்வழக்கு இன்று(நவ. 19) விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பு எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

நேரில் ஆஜரான, எடப்பாடி பழனிச்சாமி, இவ்வழக்கு தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை வரும் டிச. 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்!

மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதி... மேலும் பார்க்க

பிக் பாஸ்: 50வது நாளில் மீண்டும் நுழையும் பழைய போட்டியாளர்!

பிக் பாஸ் வீட்டுக்கு 50 வது நாளில், இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் ஒருவர் மீண்டும் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களைக் கடந்து தற்போது 8வது சீசன் விஜய் ... மேலும் பார்க்க

வணங்கான் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகி... மேலும் பார்க்க

குமார் வேம்புவின் முதல் பார்ட்னர்ஸிடமிருந்து ரூ. 3.3 கோடி நிதி பெற்ற பான்ஹெம் வென்ச்சர்ஸ்!

குமார் வேம்புவால் நிறுவப்பட்ட முதல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரூ. 3.3 கோடி நிதியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலான ஸ்டார்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.இதன்காரணம... மேலும் பார்க்க

இந்திரா காந்தி பிறந்த நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர... மேலும் பார்க்க