"LIC இணையதளம் இந்தி திணிப்பிற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது"- முதல்வர் ஸ்ட...
'முழு கல்விக் கட்டணம் டு லேப்டாப்' - பெடரல் வங்கி வழங்கும் உதவித்தொகை - யார் யார் விண்ணப்பிக்கலாம்?!
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பெடரல் வங்கி தங்களது நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் நினைவாக 'பெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு உதவித்தொகை 2024-25' வழங்க விண்ணப்பங்களை கோரியுள்ளது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
எம்.பி.பி.எஸ், பி.இ / பி.டெக், பி.எஸ்.சி நர்சிங், எம்.பி.ஏ (முழு நேரப்படிப்பு), பி.எஸ்.சி விவசாயம், பி.எஸ்.சி கூட்டுறவு மற்றும் பேங்கிங் ஆகிய துறைகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மெரிட் அடிப்படையில் சீட் பெற்றிருக்க வேண்டும்.
மறைந்த ராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
கல்லூரி கட்டணம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் கல்வி சம்பந்தமான பிற தேவைகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
வேண்டுமானால், ஒரு கணினி, லேப்டாப் அல்லது டேப்லெட் வாங்க காசு வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
சேர்க்கை கடிதம் (Admission letter), கல்லூரி கட்டண விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப வருமான சான்றிதழ்கள் மற்றும் இன்னும் சில ஆவணங்கள்.
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் மற்றும் குடும்ப வருமானம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர், உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெயர்கள் பெடரல் வங்கி இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்க கடை தேதி: டிசம்பர் 18, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.federalbank.co.in