என்னை பாதித்த அசாமி திரைப்படம்... பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
என்னை பாதித்த திரைப்படங்களின் வரிசையில் இன்று ஒரு அசாமி மொழிப்படம் பற்றி எழுதுகிறேன். பெயர் தெரியாது. யாருடைய கதை யார் இயக்குனர் என்று எதுவும் தெரியாது. ஆனால் கதை மட்டும் இன்றும் நினைவில் உள்ளது.
ஒரு கிராமத்தின் முகப்பில் ஒரு பெரிய தோட்டம் உண்டு. அது ஒரு கிழவனுக்கு சொந்தமானது. அவனுக்கு ஒரே ஒரு பேத்தி மட்டும் தான் இந்த உலகத்தில் உள்ள ஒரே ஒரு சொந்தம். அவளுடைய கணவன் இளவயதினன்.
அந்த கிராமத்தில் வசிக்கும் மிகப் பெரிய பணக்காரன் இந்த தோட்டத்தை கடந்து ஊரின் உள்ளே போகும் போதெல்லாம் இந்த தோட்டத்தின் மீது ஒரு பார்வை பார்த்துக் கொண்டே செல்வான்.
ஊரின் உள்ளே இருக்கும் தன்னுடைய வீட்டை விட சாலையின் முகப்பில் இருக்கும் இந்த தோட்டம் அவன் கண்ணை உறுத்துவதில் வியப்பென்ன!
அந்த தோட்டத்தை எப்படியாவது என்ன விலையாவது கொடுத்து வாங்கி விட துடிக்கிறான் அந்த பணக்காரன்.
அதற்காக கிழவனின் பேத்தியை மணந்த பேரனை, வேண்டுமானதை எல்லாம் வாங்கிக் கொடுத்து நகரத்திற்கு அழைத்து சென்று தன் வயப்படுத்திக் கொள்கிறான்.
அதற்கேற்றார் போல பேரனும் கிழவனிடம் இந்த தோட்டத்தை உனக்குப் பிறகு என்னால் பராமரிக்க முடியாது. எனவே இதை விற்று விடலாம் என்று சொல்லுவான்.
இது என் முன்னோர்களின் சொத்து. இதை விற்பதற்கு எனக்கு உரிமையில்லை. நான் என் பேத்திக்கு வைத்து விட்டு போக வேண்டும். அவள் அதை அவளுடைய பிள்ளைகளுக்கு வைக்கணும். இது தான் இந்த உலகம தோன்றிய நாள் முதல் வழி வழியாக வந்த நியதி. அதை என்னால் மீற முடியாது என்று விற்பதற்கு சம்மதிக்க மறுக்கிறான்.
பேரன், தன் மனைவியான கிழவனின் பேத்தியிடம் நீயாவது உன் தாத்தாவிற்கு சொல். நம்மால் இவ்வளவு பெரிய தோட்டத்தில் பாடுபட முடியாது என்கின்றான். அவளும் தாத்தா சொன்னதை சொல்லுகிறாள். மேலும் நீ என்னவோ பாடுபட்டு இந்த மரங்களை வளர்த்ததைப் போல சுலபமாக விற்க சொல்கிறாய். இங்கிருக்கும் மரங்கள் எல்லாம் என்னுடன் வளர்ந்தவைகள்.
என்னுடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்றாலும் என்னுடன் வளர்ந்தவர்களையாவது என்னிடமிருந்து பிரித்து விடாதே என்கின்றாள்.
உன்னுடன் வளர்ந்தவர்களுடனே நீ இருந்து கொள் என்று கோபித்துக் கொள்கிறான். சரி. உன்னிஷ்டம். எனக்கு என் தாத்தாவும் அவருடைய இந்த தோட்டமும் தான் முக்கியம் என்கின்றாள். அவனும் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறான்.
கடைசியாக அந்த பணக்காரனே நேரில் வந்து கிழவனிடம் தோட்டத்தை தனக்கு விற்கும்படி கேட்கிறான். இது என் முன்னோர்கள் சொத்து. என் சந்ததிக்குத் தான் சேர வேண்டும் என்கின்றான்.
நீயோ வறுமையில் இருக்கிறாய். உனக்கு வேண்டிய பணம் தருகிறேன் என்கின்றான் அவன்.
வறுமையில் இருப்பதால் யாரும் தன் தாயை விற்க துணிய மாட்டார்கள் என்கின்றான் கிழவன்.
நீயோ வயசானவன். இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பாயோ? செத்துப் போனால் இந்த தோட்டத்தை தலை மேல் தூக்கிக் கொண்டு போகப் போகிறாயா?
நாளையே நீ செத்துப் போகப் போகிறாய். அப்புறம் இதை நான் அடிமாட்டு விலைக்கு வாங்கி இங்கே ஒரு அழகிய பங்களா கட்டிக் கொள்கிறேனா இல்லையா பார் என்று சவால் விடுகிறான் அந்த பணக்காரன்.
நாளைக் காலை பொழுது விடியும் போது தான் தெரியும் யார் உயிரோடு இருப்பார்? யார் இறந்து போவார்கள் என்று என அசால்ட்டாக சொல்லி அந்த பணக்காரனை அனுப்புகிறார். .
மறுநாள் காலை கிராமத்தின் உள்ளே இருக்கும் பணக்காரனின் வீட்டிலிருந்து அழுகுரல் கேட்கும். அவன் இறந்து போயிருப்பான். பேரன் கிழவனைத் தேடி வந்து சொல்லி அழுவான். அதற்கு கிழவன் சொல்லுவார், இந்த உலகத்தில் யார் எப்போது மேலே போவார்கள் என்று யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியுமா?
நான் கிழவன் தானே. சீக்கிரம் செத்துப் போக போகிற எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சொத்து என்று நினைத்தான் அந்த பணக்காரன். இவ்வளவு சொத்திருக்கும் உனக்கு எதற்கு உயிர் என்று அந்த கடவுள் நினைத்து விட்டான் என்பான்.
பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தின் கதை தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...