செய்திகள் :

Delhi Ganesh : 'அற்புதமான மனிதர், நல்ல நடிகர்...' - ரஜினி, விஜய் டு அண்ணாமலை... இரங்கல் பதிவுகள்!

post image

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிவிட்டிருக்கும் பதிவுகள்...

நடிகர் ரஜினிகாந்த்:

"என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி".

த.வெ.க தலைவர் விஜய்:

"மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்".

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை:

"தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!"

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்:

"தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான திரு.டெல்லி கணேஷ் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது.

தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார்.

இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி..!"

நடிகர் மாதவன்:

``அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான ஆன்மா சொர்க்கத்தை மகிழ்விக்க சென்றிருக்கிறது. உங்களை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்வோம் சார்."

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்:

"டெல்லிகணேஷ் சார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது. நல்ல நடிகர்களில் ஒருவர்.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்".

`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!

சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகளில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன கலைஞர்கள் - யார் யார்?

துரைத்துறையில் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு நிகரானது, இசை துறையை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் `கிராமி விருதுகள்’. 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலை தற்போது அறிவித்த... மேலும் பார்க்க

Delhi Ganesh: ``மரணம் வரும்னு தெரியும், எப்போன்னு தெரியாதவரை நாம ராஜா'' -டெல்லி கணேஷ் நாஸ்டால்ஜியா!

டெல்லி கணேஷ் எனும் ஓர் அற்புதமான நடிகரை திரைத்துறையும் ரசிகர்களும் இழந்து நிற்கிறார்கள். அவருடன் பணியாற்றிய பலரும் அவர் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இரண்டு வருடங்களுக்க... மேலும் பார்க்க

Delhi Ganesh `சத்யா அவள் தாத்தாவை மிஸ் செய்வாள்'- ஆடுகளம் தொடர் நாயகி டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஆடுகளம்’ தொடரில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அந்தத் தொடரின் ப்ரொமோ சமீபத்தில் வெளிய... மேலும் பார்க்க

Ilaiyaraja: 'மீண்டும் மலையாள திரையுலகில்...' - ஐக்கிய அமீரகத்தில் விருப்பம் தெரிவித்த இளையராஜா

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வைரல் ஆகி வருகிறது. 1976-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம... மேலும் பார்க்க

`அமரன் படம் தவறாக சித்திரிக்கவில்லை; OTT-க்கு சென்சார்!' - சென்னையில் எல்.முருகன் பேச்சு

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கலைப்புலி தாணு, இயக்குநர் செல்வமணி உள்ளி... மேலும் பார்க்க