செய்திகள் :

ஐஸ்லாந்தில் ஒரு வருடத்தில் 7-வது முறை வெடித்த எரிமலை!

post image

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்றிரவு வெடித்துச் சிதறியுள்ளது.

ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

எரிமலையானது நேற்று மாலை வெடிக்கத் தொடங்கி நிலையில் தொடர்ந்து இரவு 11.14 மணிக்கு சுமார் 3 கி.மீ (1.8 மைல்) நீளமுள்ள பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெடித்ததை விட இது கணிசமாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இருப்பினும் கிரிண்டாவிக் நகரம் உள்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் எரிவாயு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே 50 கி.மீ(30 மைல்) தொலைவில் வசிக்கும் சுமார் 3,800 மக்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய ஒருவருடத்திற்குள் ஐஸ்லாந்தில் ஏழாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக்கின் மேலே அமைந்திருக்கும் ஐஸ்லாந்து சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கிறது. முன்னதாக கடந்த 2010ல் எரிமலை வெடித்ததில், பல மாதங்களுக்கு விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகளுக்கு 12 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை! மருத்துவருக்கு சிறை

குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் டேரியஸ் பட... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் 10 பேர் கொண்ட பயங்கரவாதி கும்பல், வியாழக்கிழமை (நவ. 21) இருவேறு இடங்களி... மேலும் பார்க்க

காஸா மீதான போருக்காக இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய ஆணை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்யும் ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில்... மேலும் பார்க்க

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் அர்மேனியாவுக்கு அங்கீகாரம் -மத்திய வெளியுறவுத்துறை

இந்தியா, பிரான்ஸ் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்ட சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் அர்மேனியாவுக்கு முழுநேர உறுப்பினராக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் ம... மேலும் பார்க்க

ரயில் நிலைய மேற்கூரை விழுந்த விபத்தில் 15 பேர் பலி!

செர்பியா ரயில் நிலைய மேற்கூரை விழுந்த விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.செர்பியாவில் வடக்கு நகரமான நோவி சாட்டில் நவ. 1 ஆம் தேதியில் ரயில் நிலைத்தில் இருந்... மேலும் பார்க்க

முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!

ரஷியா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, வியாழக்கிழமை காலை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தெற்கு அஸ்ட்ராகான் மாகாணத்திலிருந்து ரஷியா, உக்ரைன் மீது ஏவியிருக்கிறது.இந்தப் போரி... மேலும் பார்க்க