கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் தயார்! -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
தலைசிறந்த நால்வர் இருக்கிறார்கள்..! ஆஸி. பந்துவீச்சு குறித்து முன்னாள் கேப்டன் புகழாரம்!
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆஸி. பந்துவீச்சு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக உலகமே காத்திருக்கிறதென ரிக்கி பாண்டிங் கூறியதை உறுதிசெய்வதுபோல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சீசன்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 2014-15இல் இருந்து இந்தியாவுடன் ஆஸி. தொடரை வெல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நேதன் லயன் (536), மிட்செல் ஸ்டார்க் (358), ஜோஸ் ஹேசில்வுட் (273), கம்மின்ஸ் (269) அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் டாப் 10 வரிசையில் இந்த நால்வரும் இருக்கிறார்கள்.
இந்தப் போட்டி குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியினை பார்த்தோம். அந்தப் போட்டியில் பவுன்சர்கள் அதிகமாக இருந்தன. கடந்த 6,7 வருடமாக சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இருந்து வருகின்றன.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறார்கள். ஆரவாரமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால், ஆஸி. எப்படி எதிர்த்து விளையாடுமெனப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.
இந்த தரமான ஆஸி. அணியியில் குறிப்பாக பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. ஆஸி.யின் தலைசிறந்த நால்வர் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். அதனால், இரு அணியின் வீரர்கள் எப்படி பவுன்சர்களை எதிர்கொண்டு விளையாடுவார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.