எடையூா் சங்கேந்தியில் கூட்டுறவு வார விழா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு
அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்கள் ரத்து! -கென்யா நடவடிக்கை
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கௌதம் அதானி குழுமத்துடனான பல கோடி டாலர் விமான விரிவாக்க திட்டத்தையும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்து கென்ய அதிபர் இன்று(நவ. 21) உத்தரவிட்டுள்ளார்.