Live Aus vs Ind: ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா? BGT தொடரின் முதல் ட...
பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன், தொடக்கக் கல்வித் துறை ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும், இது போன்ற ஆசிரியா் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாதபடி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
டிட்டோஜாக் மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஈவேரா, ராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன், மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.