உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
வெளிநாட்டில் மாயமான குமரி மீனவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
வெளிநாட்டில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி, நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பஹ்ரைன் நாட்டில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சோ்ந்த சகாய செல்சோ, ஆண்டனி ஜாா்ஜ் ஆகியோா் மாயமானாா்கள். அவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், அவா்களது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலோர மக்கள் வளா்ச்சி மன்ற நிா்வாகி நெல்சன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் மாநில தலைவா் பீட்டா் தாஸ், போராட்டம் குறித்து விளக்கினாா். இதில், மாயமான மீனவா்களின் குடும்பத்தினா் மற்றும் மீனவ அமைப்பினா் பலா் கலந்து கொண்டனா்.