செய்திகள் :

பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்?

post image

மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வர் இன்றைக்குள் முடிவு செய்யப்பட்டு, நாளை பதவியேற்க வேண்டிய கட்டாயத்துக்கு மகாயுதி கூட்டணியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய மகாராஷ்டிர அரசின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால், புதிய முதல்வர் பதவியேற்க வேண்டும். இல்லையெனில், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும்.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி, வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 132, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றன.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கூட்டணிக்கு மொத்தம் 50 இடங்களே கிடைத்தன.

புதிய முதல்வர் யார்?

மகாயுதி கூட்டணி உருவாக்கப்பட்டபோது, பெரும்பான்மை இல்லாத போது சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க பாஜகவும் தேசியவாத காங்கிரஸும் ஒப்புக் கொண்டன.

பாஜக தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று, தேவேந்திர ஃபட்னவீஸும் அப்போது துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால், இம்முறை பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரே முதல்வராக பதவியேற்கும் சூழல் நிலவுகிறது.

சிவசேனையின் ஷிண்டே மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனை பாஜக தலைவர்கள் ஏற்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக அறிவித்தாலும் ஆதரவு அளிப்பேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இன்று நடைபெறும் மகாயுதி கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் ஃபட்னவீஸை முதல்வராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறை ஒதுக்கீடு கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?

நாளை பதவியேற்பு

மும்பையில் உள்ள வான்கடே மைதானம் அல்லது சிவாஜி பூங்காவில் செவ்வாய்க்கிழமை(நாளை) மாலை பதவியேற்பு நிகழ்வு நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் நாளை காலை அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக மூத்த தலைவர்களும் மும்பை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்க வாய்ப்புள்ளது.

கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.குருகிராம் மாவட்டத்தில் இருந்து பரேலி நோக்கி சனிக்கிழமை இரவு திருமண... மேலும் பார்க்க

உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்ற... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: முதல் நாளே ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்த காங்கிரஸ் எம்பிக்கள்!

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரி அவைத் தலைவருக்கு காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள... மேலும் பார்க்க

மக்களவையில் டிஜிட்டல் வருகைப் பதிவேடு!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று (நவ.25) தொடங்குகிறது. இதில், மக்களவை உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் வருகையைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் நாட... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா். இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்ன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மாற்று... மேலும் பார்க்க