செய்திகள் :

மகாராஷ்டிரா: தேவேந்திர பட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே.. முதல்வர் பதவி யாருக்கு? முடிவெடுப்பதில் சிக்கல்!

post image

பா.ஜ.க தனித்து 130-க்கும் மேல் வெற்றி..

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. பா.ஜ.க தனித்து 130 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே முதல்வர் பதவியை தங்களுக்கு வைத்துக்கொள்ள பா.ஜ.க முனைப்பு காட்டி வருகிறது.

தேவேந்திர பட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே

பா.ஜ.க வின் தேவேந்திர பட்னாவிஸ் செய்த கடின உழைப்பு காரணமாகவே இந்த அளவுக்கு அக்கட்சியால் அதிக தொகுதியில் வெற்றி பெற முடிந்தது என்று அக்கட்சி கருதுகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டேயை முன்னிறுத்தியே சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இருப்பதால் ஏக்நாத் ஷிண்டேயை மீண்டும் முதல்வராக்கவேண்டும் என்று ஷிண்டே தலைமையிலான சிவசேனா கோரி வருகிறது. இதனால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்து வருகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நாளையோடு முடிகிறது. இதனால் ஓரிரு நாளில் புதிய அரசு பதவியேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ.1500

ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்த பெண்களுக்கு மாதம் ரூ.1500 திட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது என்றும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும், எனவேதான் இந்த அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்றும் சிவசேனா கூறிக்கொண்டிருக்கிறது. எனவே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே மறுத்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு தான் தொடர்ந்து முதல்வராக இருந்தால் அடுத்து வரக்கூடிய மாநகராட்சி தேர்தலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஏக்நாத் ஷிண்டே வாதிடுகிறார்.

ஏக்நாத் ஷிண்டே

தேவேந்திர பட்னாவிஸை முன்னிறுத்தும் பா.ஜ.க

ஆனால் பா.ஜ.க தலைமையோ எப்படியும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வர் பதவிக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இந்துத்துவ அமைப்புகளின் தீவிர பங்களிப்பு, பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர பிரசாரம் தான் தேர்தல் வெற்றிக்கு வித்திட்டதாக பா.ஜ.க நம்புகிறது. முதல்வர் பதவி தொடர்பாக சனிக்கிழமையில் இருந்து பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது.

பாஜகவுக்கு அஜித்பவார் ஆதரவு

ஆனால் இதில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை இன்றும் தொடர இருக்கிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக துணை முதல்வர் அஜித்பவார் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அஜித்பவார் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் அமைச்சர் சுனில் தட்கரே, முதல்வர் பதவி தொடர்பாக எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. இது தொடர்பாக மூன்று கட்சிகளும் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும்''என்றார். ஓரிரு நாளில் புதிய அரசு பதவியேற்பு முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

முதல்வர் பதவி தொடர்பாக பா.ஜ.கவின் எம்.எல்.ஏ.ராம் கதமிடம் பேசியபோது, பா.ஜ.க ஏற்கெனவே 130-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. மக்கள் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவே வாக்களித்துள்ளனர்''என்றார்.

இவ்விவகாரத்தில் பா.ஜ.க தலைமை தலையிட்டு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அனைத்து அமைச்சர்களும் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

இதனால் அனைவரும் மீண்டும் அமைச்சர்களாக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகாராஷ்டிரா அமைச்சரவை முழுமையானதாக இல்லாமல் இருந்தது. இனி பதவியேற்கும் அரசு முழுமையான அமைச்சரவையை கொண்டதாக இருக்கும்.

Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: அடிக்கடி முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், முருங்கைக்கீரை பொடியை வைத்துச்செய்யப்படுகிற மாத்திரைகளை, கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறதே... அது எந்த ... மேலும் பார்க்க

தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -சாத்தியமானது எப்படி?

செங்குளம் கண்மாய்தேனி மாவட்டம் நிர்வாகம், பெரியகுளம் அருகே 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குளம் கண்மாய் முழுவதும் சூழ்ந்திருந்த வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பாலோயர் 56 லட்சம்; கிடைத்த ஓட்டு 155... நடிகர் அஜாஸ் கான் நிலை..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பலர் தங்களது அதிர்ஷ்டத்தை நம்பி போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர். பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அஜா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே மகன் வெற்றி; ராஜ் தாக்கரே மகன் தோல்வி... குடும்ப உறவில் மேலும் விரிசல்!

மாகிம் தொகுதியில் போட்டியிட்ட அமித் தாக்கரேமகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு கடந்த 20-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டது. இத்தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 4 முறை முதல்வர்; மத்திய அமைச்சராக இருந்தவர்... சரத்பவார் படுதோல்விக்கு என்ன காரணம்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த கூட்டணி 226 தொகுதிகளில் வெற்றியில், முன்னிலை பெற்று இருக்கிறது. இத்... மேலும் பார்க்க