திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்: 5 பேர் பலி!
ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!
பங்குச் சந்தை இன்று (நவ. 25) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
1960 புள்ளிகள் அதிகரித்து 80193.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 9.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 80305.31 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 360 புள்ளிகள் உயர்ந்து 23,411.80 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 9.50 மணி நிலவரப்படி, நிஃப்டி 24277.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | அதானிக்கு நேரடியாக நோட்டீஸ்: அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை
ரிலையன்ஸ்,ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
ஹெச்சிஎல், ஜேஎஸ்டபிள்யு போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், பொதுத்துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து துறைகளும் சற்றே விலை உயர்ந்து வருகின்றன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் ஏற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறறது.