செய்திகள் :

ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

post image

சென்னை: சென்னையில் 5 ஆவது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம் உள்ளது. நவ.18-ஆம் தேதி பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.56,520-க்கும், நவ.20 ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கும், நவ.21 ஆம் தேதி பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.57,160-க்கும், விற்பனையானது.

இதையும் படிக்க |மேட்டூரில் தாபா ஹோட்டலில் தீ விபத்து:ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 57,800-க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 7,225-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 320 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை தொடர்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.

போா் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்து வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் பவுன் ரூ.60 ஆயிரத்தை தொடக்கூடும் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

கெயில் நிகர லாபம் 10% அதிகரிப்பு

எரிவாயு விநியோகத்தில் வருவாய் அதிகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் அதிக லாபம் ஆகிய காரணங்களால் பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீ... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகாா்ப் பண்டிகைக் கால விற்பனை உச்சம்

நடப்பாண்டின் பண்டிகைக் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு! வரலாறு காணாத சரிவைக் கண்ட அதானி பங்குகள்!

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் மிகப்பெரிய சரிவைக் கண்ட அதானி குழும பங்குகள், குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்ற விளக்கத்தை... மேலும் பார்க்க

ரூ. 2.2 லட்சம் கோடி பங்குகளை இழந்த அதானி குழுமம்!

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப... மேலும் பார்க்க

பார்லே அக்ரோ வருவாய் 12% சரிவு!

புதுதில்லி: குளிர்பான சந்தையில் ஃப்ரூட்டி, அப்பி, ஸ்மூத் மற்றும் பெய்லி ஆகிய பிராண்டுகளுடன் செயல்படும் பார்லே அக்ரோ, 2024 நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாயில் 12.3 சதவிகிதம் குறைந்து ரூ.3,126.06 க... மேலும் பார்க்க

ஆப்பிள் இந்தியாவின் நிகர லாபம் 23% அதிகரிப்பு!

புதுதில்லி: ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், 2023-24ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,745.7 கோடியாக உள்ளது.ஆப்பிள் இந்தியா நிறுவனம் 2023ஆம் நிதியாண்டில் 2... மேலும் பார்க்க