Inbox 2.0 : Eps 13 - `அந்த 1500 பேருக்கு நன்றி!' | Cinema Vikatan
பார்லே அக்ரோ வருவாய் 12% சரிவு!
புதுதில்லி: குளிர்பான சந்தையில் ஃப்ரூட்டி, அப்பி, ஸ்மூத் மற்றும் பெய்லி ஆகிய பிராண்டுகளுடன் செயல்படும் பார்லே அக்ரோ, 2024 நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாயில் 12.3 சதவிகிதம் குறைந்து ரூ.3,126.06 கோடியாக உள்ளது என்று நிறுவனம் தனது ஆர்ஓசி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் மொத்த லாபம் 89.1 சதவிகிதம் சரிந்து ரூ.17.29 கோடியாக உள்ளது.
இந்திய குளிர்பானத் துறையில் செயல்படும் பட்டியலிடப்படாத நிறுவனமான பார்லே அக்ரோ பிரைவேட் லிமிடெட், 2023 ஆம் நிதியாண்டில் அது ரூ.3,565.96 கோடி செயல்பாடுகளுடன் ரூ.158.78 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதையும் படிக்க: ஆப்பிள் இந்தியாவின் நிகர லாபம் 23% அதிகரிப்பு!
பிரகாஷ் ஜே சவுகான் தலைமையிலான பார்லே அக்ரோவின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 2024 ஆம் நிதியாண்டில் 12.15 சதவிகிதம் குறைந்து ரூ.3,209.43 கோடியாக உள்ளது. நிதியாண்டின் 2023ல் அது ரூ.3,653.48 கோடியாக இருந்தது.
உள்நாட்டு விற்பனை மூலம் அதன் வருவாய் ரூ.3,061.10 கோடியாகவும், ஏற்றுமதி மூலம் ரூ.26.81 கோடியாகவும் இருந்தது.
நிறுவனத்தின், 'விளம்பர செலவுகள்' 2024 ஆம் நிதியாண்டில் 17.7 சதவிகிதம் அதிகரித்து ரூ.278.38 கோடியாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.236.49 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த செலவினம் 8.19 சதவிகிதம் குறைந்து ரூ.3,194.28 கோடியாக உள்ளது.