Inbox 2.0 : Eps 13 - `அந்த 1500 பேருக்கு நன்றி!' | Cinema Vikatan
3 மணி நேரத்தில் 362 மி.மீ... ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!
ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளங்களில் மழை தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெய்த மழை தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:
ராமேஸ்வரத்தில் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் அதிகப்படியாக 411 மி.மீ மழை பெய்துள்ளது. தங்கச்சிமடத்தில் 322 மி.மீ. மழைப்பொழிந்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. 3 மணி நேரத்தில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதி கனமழைக்கு வாய்ப்பு!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 190 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.