செய்திகள் :

பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் கடிதம்!

post image

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளடக்கிய 14 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 14 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற்றும் IND-GJ-25-MM-1582 என்ற பதிவெண்கள் கொண்ட இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றபோது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தில்லி எய்ம்ஸில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள்!!

மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும் பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாக்கு மூட்டையில் தலித் பெண்ணின் உடல்: பாஜகவுக்கு ஆதரவளித்ததால் கொலையா?

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹல் தொகுதியில் 23 வயது பிற்படுத்தப்பட்ட பெண்ணின் சடலம், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்ஹல் தொகுதியில் இன்று(நவ. 20) இடைத்தேர்தல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

மின் மாற்றி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதா..?: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: மின்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும், கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதில் எந்தவித தலையீடுகளோ, தவறு... மேலும் பார்க்க

‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்: பார்த்திபன்

‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக நேற்று தனித்தனியாக அறிவிப்பு வெளியான நிலையில்... மேலும் பார்க்க

கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்: அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் ... மேலும் பார்க்க

டி20 தரவரிசை: முதலிடத்தில் ஹார்திக் பாண்டியா! 3-வது இடத்தில் திலக் வர்மா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 4 போட்டி... மேலும் பார்க்க

கயல் தொடரில் பிகில் பட நடிகர்!

கயல் தொடரில் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில வாரங்கள... மேலும் பார்க்க