மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன்(நவ. 21) ஓய்வு பெறவுள்ள நிலையில், கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதியுடன் கலந்தோலித்த குடியரசுத் தலைவர் ஜெயக்குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக குறைந்துள்ளது. காலியாகவுள்ள நீதிபதி பதவிகள் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.