மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்
50 வயதுக்கு மேல அதிகரிக்கும் டைவர்ஸ்; இன்டர்நேஷனல் ரிசர்ச் சொல்வதென்ன? | காமத்துக்கு மரியாதை - 219
க்ரே டைவர்ஸ் (Grey Divorce) தெரியுமா உங்களுக்கு..? ஐம்பது வயசுக்கு மேல, அதாவது தலையில க்ரே ஹேர் வந்ததுக்கு அப்புறம் செய்யப்படுற விவாகரத்துக்குத்தான் க்ரே டைவர்ஸுனு பேர். இதுதொடர்பா உலகளவுல நடந்த ஆராய்ச்சி ஒண்ணு, க்ரே டைவர்ஸுக்கான காரணங்களை வெளியிட்டிருக்கு. ''ஐம்பது வயசை கிராஸ் பண்ணியாச்சு. பிள்ளைங்க வளர்ந்தாச்சு. இதுக்கு மேல என்ன டைவர்ஸ் வேண்டிக்கிடக்கு, மிச்ச காலத்தையும் அப்படியே ஓட்ட வேண்டியதுதானே'' அப்படிங்கிற மனப்பான்மையில இருக்கிற பலருக்கும் இந்த ஆராய்ச்சி சொல்ற காரணங்கள் நிச்சயம் யோசிக்க வைக்கும்''னு சொல்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதைப்பற்றி விரிவா பேச ஆரம்பிச்சார்.
கடமைகள் முடிஞ்சாச்சு...
திருமண வாழ்க்கையில பெரிய ஈடுபாடு இல்ல. தவிர, குழந்தைங்க படிப்பு, கல்யாணம்னு எல்லா கடமைகளையும் முடிச்சாச்சு. அன்பு, ஈர்ப்பு எதுவும் இல்ல. இத தொடர வேணாம்னு முடிவெடுத்துடுவாங்க. க்ரே டைவர்ஸுக்கு முதல் முயற்சி செய்யுறதுல ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம்.
ரகசியம் அம்பலமானா...
கணவனோ அல்லது மனைவியோ, பல வருடங்களா திருமணம் தாண்டின உறவுல இருப்பாங்க. அதை பல வருஷங்களா பலப்பல தில்லாலங்கடி வேலைகள் செஞ்சு மறைச்சிட்டும் வந்திருப்பாங்க. செய்றவங்களுக்கு அது ஹேப்பியா, த்ரிலிங்கா இருக்கும். ஆனா, பாதிக்கப்பட்டவங்களுக்கு நம்பிக்கை காயப்பட்டுடுது இல்லியா..? ஸோ, பல வருட ரகசியம் மத்திம வயசுல தெரிய வர்றப்போ, டைவர்ஸ்தான்.
ஓயாத சண்டை...
சில குடும்பங்கள்ல ஏதோவொரு பிரச்னையால, கணவன் மனைவிக்குள்ள ஓயாத சண்டை பல வருடங்களா தொடர்ந்து நடந்துட்டிருக்கும். பிள்ளைங்க எல்லாம் வளர்ந்தப்புறம் 'போதும் இந்த திருமண வாழ்க்கை'ன்னு முடிவெடுத்துடுவாங்க.
காசு... பணம்... துட்டு...
அடிப்படை தேவைகளுக்கும் பணமில்லாத வாழ்க்கை நரகம். குழந்தைங்களுக்காக சகிச்சிக்கிட்டிருக்கிறவங்க வயசு ஆக ஆக பொறுமை இழந்து, டைவர்ஸ்னு முடிவெடுத்திடுவாங்க.
போதைப்பிரியர்கள்...
அளவுக்கதிகமான மதுப்பழக்கம், போதை பழக்கம் வாழ்க்கைத்துணைக்கு இருந்தா, அவங்க மேல இருக்கிற லவ்வுக்காக பொறுத்துக்கிற லைஃப் பார்ட்னர்கூட நடுத்தர வயசு வர்றப்போ பொறுமை இழந்திடுறாங்களாம். வயசுக்கே உரிய உடல் பலவீனங்கள் வர்றப்போ, வாழ்க்கைத்துணையும் எந்நேரமும் தள்ளாடிக்கிட்டிருந்தா போதும் இந்த மேரேஜ் லைஃப்ங்கிற சூழலுக்குப் போயிடுறாங்க.
குடும்ப வன்முறை...
இது உலக அளவுல செய்யப்பட்ட ஆராய்ச்சிங்கிறதாலதான் குடும்ப வன்முறைங்கிற காரணம் இவ்ளோ பின்னாடி சொல்லப்பட்டிருக்கு. ஆனா, இந்தியாவுல மட்டுமே இந்த ஆராய்ச்சியை செஞ்சிருந்தா, இந்தக் காரணம்தான் க்ரே டைவர்ஸுக்கான முதல் காரணமா இருந்திருக்கும்.
சரி செய்ய முடியாத வியாதி...
வாழ்க்கைத்துணை கடுமையான வியாதியோட போராடுறப்போ, ஆரம்பத்துல காதலோட பணிவிடை செஞ்சவங்க ஒருகட்டத்துல 'இது சரியே ஆகாது'ன்னு தெரியுறப்போ தன்னோட மனநலத்தைக் காப்பாத்திக்க அவங்களை விட்டுப் பிரிஞ்சிடுவாங்க. இந்த டைப் விவாகரத்துகளும் 50 வயசுகள்லதான் நடக்கும். ஓர் உதாரணம் சொல்லணும்னா, உலகத்தோட தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை நம்ம எல்லோருக்குமே தெரியும். அவரோட நோர் தந்த சுமையை தாங்க முடியாம அவரோட முதல் மனைவி ஸ்டீபனை விவாகரத்து செஞ்சுட்டார். அவரவர் நியாயம், அவ்ளோதான்.
எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோமும் தொண தொணப்பும்...
குழந்தைங்க படிச்சு, திருமணமாகி, வேலைக்குப் போய்டுவாங்க. கணவனும் மனைவியும்கூட ரிட்டயர்ட் ஆகி வீட்ல இருப்பாங்க. இந்த நேரத்துல ரெண்டு பேர்ல ஒருத்தர், இத செய் அத செய்னு இன்னொருத்தரை விரட்டிட்டே இருப்பார். நம்ம நாட்ல கணவர்கள் மனைவியை இப்படி பாடாபடுத்துறது ரொம்ப ரொம்ப சகஜம். 24 மணி நேரமும் இந்த தொண தொணப்பு தாங்க முடியாத லைஃப் பார்ட்னர் போதும்னு போதும்டா இந்த கல்யாண வாழ்க்கைன்னு முடிவெடுத்திடுவாங்க. நிறைய படிச்சு, உயர்ந்த பதவியில இருந்தவங்ககூட இந்த பாயின்ட்லதான் க்ரே டைவர்ஸ் செய்யுறாங்கன்னு அந்த ஆய்வு சொல்லுது.
தன் வாழ்க்கையை தான் வாழணும்னு...
உலக அளவுல புகழ்பெற்ற குடும்பங்கள்லயும் இந்த க்ரே டைவர்ஸ் நடக்கும். இருவர்ல ஒருத்தர் உலகளவுல புகழ்பெற்றவரா இருப்பார். இன்னொருவர் வீடு, குழந்தைகள் அப்படின்னு தன் மொத்த வாழ்க்கையையும் குடும்பத்துக்காகவே செலவழிச்சிருப்பாங்க. அவங்களோட மத்திம வயசுல தன்னோட வாழ்க்கையை தான் வாழவே இல்லைங்கிறது தெரியுறப்போ, அந்த திருமண வாழ்க்கையை விட்டு தன்னோட அடையாளாத்தைத் தேடி வெளியேறிடுவாங்க.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!